மிரள வைக்கும் கொரோனா திணறும் சென்னை

0 2778

தமிழகத்தில் புதிய உச்சம் எட்டிய கொரோனாவால், சென்னையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 804 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் உயிரிழந்த 173 பேரில், சென்னையைச் சேர்ந்த 129 பேர், கொரோனாவுக்கு இரை ஆகி விட்டனர்.

உலுக்கும் கொரோனாவால் மிரளும் தமிழகத்தில், கொரோனா பாதிப்பால் சென்னை திணறி வருகிறது. ஒவ்வொரு நாளும் உயிர்ப்பலியும், பாதிப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 804 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், இங்கு மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

செங்கற்பட்டில் 85 பேரும், காஞ்சியில் 16 பேரும் பாதிக்கப்பட, திருவள்ளூரில் 47 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 55 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மதுரையில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேருக்கு வைரஸ்தொற்று உறுதி ஆனது.

ஒரே நாளில் தமிழகத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆன ஆயிரத்து149 பேரில், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மட்டும் ஆயிரத்து 7 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 781 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை 7 ஆயிரத்து 891 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்த 173 பேரில், 129 பேர் சென்னையைச்சேர்ந்தவர்கள். செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 11 பேர், கொரோனாவுக்கு இரை ஆகி உள்ளனர்.

கொரோனா உயிரிழப்பு பட்டியலில், நாமக்கல் மாவட்டம் முதல் பலியை பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிர்ப்பலியும் கடுமையாக உயர்ந்து வருவது, அதிர்ச்சியை அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments