வெட்டுக்கிளிப் பாதிப்பு உதவுவதாக பிரதமர் மோடி உறுதி

0 5405

பொருளாதாரம் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், அனைவரும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் முதல் ஹரித்துவார் வரை அனைவரும் யோகாவைத் தீவிரக் கவனத்தில் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெட்டுக்கிளி படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு உதவுவதாகவும் உறுதியளித்துள்ளார். 

மனத்தின் குரல் என்னும் தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றினார். அப்போது பொருளாதாரத்தின் பெரும்பகுதி இயங்கி வரும் நிலையில், அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அனைவரின் ஆதரவாலும் கொரோனாவுக்கு எதிராக வலிமையுடன் போராட முடிவதாகவும், சிக்கலான நேரத்திலும் கொரோனாவுக்கு எதிராகப் போரிடும் புதிய வழிகளைக் கண் Mann Ki Baatடுபிடிக்கும் முயற்சியில் ஆய்வகங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிற நாடுகளைப் போல் இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவவில்லை என்றும், இறப்பு விகிதமும் குறைவு என்றும் குறிப்பிட்டார்.

ஊரடங்கால் அனைத்துப் பிரிவினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழைகளும் தொழிலாளர்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் வலிகளும் துயர்களும் சொல்லில் அடங்காதவை என்றும் குறிப்பிட்டார். 

நாட்டின் பல மாநிலங்கள் வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, சிறு பூச்சிகளால் எவ்வளவு சேதம் ஏற்படும் என்பதை வெட்டுக்கிளிப் படையெடுப்பு நினைவூட்டுவதாகத் தெரிவித்தார்.

வெட்டுக்கிளிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவுவதாகவும் உறுதியளித்தார்.

மத்திய மாநில அரசுகள் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு உதவ முடியும் எனத் தெரிவித்தார்.

உலகத் தலைவர்கள் பலருடன் தான் பேசிய போது அவர்கள் யோகா, ஆயுர்வேதா ஆகியவற்றில் பெரிதும் ஆர்வம் காட்டியதாகவும், அவற்றைப் பற்றித் தன்னிடம் கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார்.

உடல்நலத்துக்கு யோகா எவ்வாறு உதவுகிறது என்கிற விழிப்புணர்வை மக்கள் பெற்றுள்ளதாகவும், ஹாலிவுட் முதல் ஹரித்துவார் வரையுள்ள மக்கள் வீட்டில் இருந்து யோகாசனம் செய்வதில் தீவிரக் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

யோகா, ஆயுர்வேதாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், அவற்றைப் பின்பற்றவும் விரும்பும் எல்லோரும் இணையத்தளத்தின் வழியாக அதைக் கற்று வருவதாகவும் தெரிவித்தார்.

சமுதாயத்துக்கும், எதிர்ப்பாற்றலுக்கும், ஒற்றுமைக்கும் யோகா நல்லது எனத் தெரிவித்தார். கொரோனா வைரஸ் நமது சுவாச அமைப்பைப் பாதிப்பதாகவும், யோகாசனத்தின் மூச்சுப் பயிற்சியால் சுவாச அமைப்பு வலுப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மகளின் படிப்புக்காகச் சேமித்த பணத்தில் ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய மதுரையைச் சேர்ந்த முடி திருத்தும் கடைக்காரருக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மதுரையில் மேலமடையைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர் மோகன் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறார்.

தனது மகளின் படிப்புக்குச் சேர்த்து வைத்த 5 லட்சம் ரூபாயை இதற்காகச் செலவிட்டுள்ளார். ஏராளமானோர் உதவி தேடி வரும் நிலையில் தேவைப்பட்டால் மனைவியின் நகைகளை அடகு வைத்தும், நிலத்தை விற்றும் உதவி செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்.

மக்களுக்கு உதவச் செலவிடும் பணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து மீண்டும் ஈட்டிவிட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மோகனின் உதவி பற்றி அறிந்த பிரதமர் மோடி வானொலியில் பேசியபோது, மகள் படிப்புக்காக வைத்திருந்த பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

ஏழை, எளியோருக்கு செய்த உதவிக்காக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளது தனக்கும் தனது குடும்பத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக முடி திருத்தும் தொழிலாளி மோகன் தெரிவித்துள்ளார்.

எதார்த்தமாக செய்த உதவிக்கு பிரதமரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் என நினைக்கவில்லை என்று நெகிழ்ச்சியுடன் அவர் கூறினார்.

வறுமையால் தங்கள் குடும்பம் சந்தித்த கஷ்டமான அனுபவத்தை சுற்றி உள்ளவர்கள் யாரும் அனுபவிக்கக் கூடாது என்று எண்ணியே உதவி செய்யுமாறு தனது பெற்றோரை வலியுறுத்தியதாக சிறுமி நேத்ரா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments