2019-20 நிதியாண்டுக்கான புதிய வருமான வரி படிவங்களை மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் வெளியிட்டுள்ளது
வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய படிவங்களை மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
கொரோனாவை முன்னிட்டு, இந்த ஆண்டு தாக்கல் செய்யும் வருமான வரி படிவங்களில், ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை மேற்கொள்ளப்படும் வரி சேமிப்பு முதலீடுகளையும் சேர்த்துக் கொள்ள ஏதுவான வகையில் புதிய பாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதே போன்று இந்த ஆண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளும் ஜூலை 31ல் இருந்து நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
26 ஏஎஸ் படிவம், வரி செலுத்துவோரின் வருடாந்திர நிதி தகவல்களை தாக்கல் செய்யும் படிவமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் டிடிஎஸ் விவரங்கள், நிதி பரிவர்த்தனைகள், ரீபண்ட் விவரங்கள், செலுத்தப்பட்ட வரியின் அளவு உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய வேண்டும்.
CBDT notifies Income Tax Return forms 1 to 7 for AY 2020-21(FY 2019-20), vide G.S.R. 338(E) dated 29th May, 2020. pic.twitter.com/xp8m20dbp5
— Income Tax India (@IncomeTaxIndia) May 31, 2020
Comments