உத்தரகாண்டில் சுற்றுலாத்துறை அமைச்சரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு

0 1755

உத்தரகாண்ட்டில் அமைச்சரின் மனைவிக்கு கொரோனா உறுதியானதால், அமைச்சர் உள்ளிட்ட 42 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

உத்தரகண்ட் மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக இருப்பவர் சத்பால் மகராஜ். அவருடைய மனைவி அமிருதா ராவத்துக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது.

இதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில்,கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், அமைச்சர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதேபோல் அமைச்சரின் வீட்டைச் சேர்ந்த 41 பேரும் தனிமைபடுத்தப்பட்டு, சளி மாதிரிகள் சேர்க்கப்பட்டு  பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சத்பால் மகராஜூம் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments