ஜி 7 அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் - அதிபர் டிரம்ப்
ஜி 7 நாடுகளின் அமைப்பில் இந்தியாவும் இடம் பெற வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இப்போது இந்த அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய பொருளாதார வலிமை வாய்ந்த நாடுகள் உள்ளன.
இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் ராக்கெட் ஏவலுக்குப் பிறகு தமது விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளை சேர்க்காவிட்டால் ஜி 7 கூட்டமைப்பால் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதற்கு ஏதுவாக இந்த அமைப்பின் கூட்டத்தை வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் சீனாவுக்கு எதிரான சர்வதேச திட்டடங்களை வகுக்க ஜி 7 அமைப்பை விரிவாக்க வேண்டும் என்பதே டிரம்பின் நோக்கமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
ஜி 7 அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் - அதிபர் டிரம்ப் | #G7Meet | #DonaldTrump https://t.co/jnKCTBucC0
— Polimer News (@polimernews) May 31, 2020
Comments