சூறாவளி காற்றால் தாஜ்மஹாலில் லேசான சேதம்

0 2460

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால், சூறாவளி காற்றில் லேசாக சேதமடைந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதியோரம் முகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தாஜ்மஹால், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறாவளி காற்று வீசியதுடன் மழையும் கொட்டித் தீர்த்தது.

இதில் தாஜ்மஹாலின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன. அதை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆக்ரா தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் வசந்த் குமார் ஸ்வர்ணாகர் (Basant Kumar Swarnakar) மார்பிள் கைப்பிடியும் ( marble railing), 2 சிகப்பு மணற்கல் திரைகளும் (red sandstone screens) சேதமடைந்துள்ளதாக கூறினார்.

பிரதான கல்லறை பகுதி மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து கிடப்பதால் தோட்டத்திலும் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.  இதுபோல மேற்குவாயில் பகுதி, டிக்கெட் விநியோக பகுதிகளிலும் சில சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments