ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசாவின் இரு வீரர்களுடன், அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவிலிருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு இரு வீரர்களை அனுப்பும் திட்டம் கடந்த மாதம் செயல்பாட்டுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 28ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 என்ற ராக்கெட் ஏவப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மோசமான வானிலை காரணமாக ராக்கெட் ஏவுவது தள்ளி வைக்கப்பட்டது.
இதையடுத்து புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்தில் இருந்து நேற்று நள்ளிரவு ராக்கெட்டை மீண்டும் ஏவும் பணிகள் நடந்தன. இதனையடுத்து நாசாவைச் சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் ராக்கெட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பின் நள்ளிரவு 12 மணி 53 நிமிடங்களுக்கு வெண்புகையை உமிழ்ந்தபடி பால்கன் ராக்கெட் விண்ணில் சீறிச் சென்றது.
கடந்த 2011ம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்கா தானாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதை நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் அமெரிக்க வீரர்கள் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்று வந்தனர். இந்நிலையில் எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்த நாசா, அந்த நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டது. இறுதியில் நாசாவும் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்சும் தங்களின் வரலாற்று சாதனையை நிறைவேற்றி உள்ளன. இந்தச் சாதனையை அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.
Welcome to a new era of human spaceflight ????
— NASA (@NASA) May 31, 2020
In case you missed it: @AstroBehnken & @Astro_Doug left Earth at 3:22pm ET on our #LaunchAmerica mission with @SpaceX. Tune in to NASA TV for continuous coverage as the crew travels to the @Space_Station: https://t.co/mzKW5uV4hS pic.twitter.com/TC5b6qre6F
Comments