அடங்க மறுக்கும் கொரோனா உச்ச பாதிப்பில் சென்னை
தமிழகத்தில் அடங்க மறுக்கும் கொரோனாவால், சென்னையில் வைரஸ் தொற்று பாதிப்பு, உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் 5 பேரை காவு வாங்கியதால் சென்னையில் மட்டும் கொரோனா பலி, 119 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தை கொரோனா ஆட்டிப்படைத்து வரும் சூழலில், வைரஸ் தொற்றால் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 616 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், இங்கு மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கி விட்டது.
செங்கற்பட்டில் 94 பேரும், காஞ்சியில் 22 பேரும் பாதிக்கப்பட, திருவள்ளூரில் 28 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.
ஒரே நாளில் தமிழகத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆன 856 பேரில், இந்த 4 மாவட்டங்களில் மட்டும் 760 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 539 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை 7 ஆயிரத்து 321பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்த 160 பேரில், 119 பேர் சென்னையைச்சேர்ந்தவர்கள். செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 11 பேர், கொரோனாவுக்கு இரை ஆகி உள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ள போதிலும் சென்னையில் கொரோனா அடங்க மறுக்கிறது. எனவே, போர்க்கால அடிப்படையில்
தமிழக சுகாதாரத்துறை, பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.
Comments