விடாது துரத்தும் கொரோனா உச்சம் தொட்ட அச்சம்

0 2561

மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களில் வரலாறு காணாத வகையில் கொரோனா பாதிப்பு, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் வைரஸ் தொற்றுக்கு உறுதி ஆனோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கி

உலக நாடுகளை உலுக்கும் கொரோனா, தற்போது இந்தியாவை ஆட்டிப் படைத்து வருகிறது. இதனால், உயிர்ப்பலிகளும் பாதிப்புகளும் உச்சத்தை எட்டியுள்ளன.

மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 940 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டி
விட்டது.

ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்ததால், அங்கு கொரோனா பலி 2 ஆயிரத்து200 - ஐ நெருங்கி விட்டது.

மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில், தமிழகம் 2- வது இடம் வகிக்கிறது.

டெல்லியை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்து 500 ஐ எட்ட, குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி விட்டது.

ராஜஸ்தானில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 400 - ஐ தாண்ட, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்தில் தலா 7 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேற்கு வங்காளம், ஆந்திரா, பீஹார், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இதுதவிர, ஜம்மு - காஷ்மீர், ஒடிசா, ஹரியானாவிலும், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கேரளாவில் ஒரே நாளில், 58 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கி விட்டது. அதேநேரம் கொரோனா உயிர்ப்பலி, 5 ஆயிரத் தை தாண்டி உள்ளது. இதனிடையே,கொரோனா சிகிச்சை முடிந்து, இதுவரை சுமார் 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு, வீடு திரும்பி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments