கொரோனா புதிய உச்சம் உயரும் பாதிப்பு மிரளும் தமிழகம்

0 8683

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 938 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதேநேரம், 12 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

இந்தியாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 938 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

இவர்களில் குவைத்தில் இருந்து திரும்பிய 3 பேரும், பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 79 பேரும் அடங்குவர். எனவே, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி விட்டது.

சென்னை, மதுரை, சேலம், நெல்லை , விழுப்புரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு வயது முதல் 4 வயது வரை 8 பெண் குழந்தைகள் உள்பட
மொத்தம் 11 குழந்தைகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு திருநங்கை ஒருவரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

ஒரே நாளில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்ததால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், 37 வயது மற்றும் 72 வயது என இரு பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு இரை ஆனார்கள்.
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 54 வயது ஆண் ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் 687 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

12 வயதுக்கு உட்பட்டவர்களில் 600 சிறுமிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 239 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 6 ஆயிரத்து 513 பெண்கள், 6 திருநங்கைகள் உள்பட மொத்தம் 18 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 729 மூதாட்டிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 915 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments