ஜூன் 1 முதல் தமிழகத்தில் 4 வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு தொடங்கியது
தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 4 வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், காட்பாடி - கோவை, கோவை - மயிலாடுதுறை வழித்தடங்களில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மதுரையிலிருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் நண்பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் சென்று சேரும். விழுப்புரத்திலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் இரவு 9.20 மணிக்கு மதுரை வந்து சேரும்.
இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, அரியலூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். திருச்சியிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மதியம் ஒரு மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.
நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் இரவு பத்தேகால் மணிக்குத் திருச்சி சென்று சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
Comments