கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
பணியின் போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்புடைய பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா, கடந்த 27ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்புடைய பணிகளில், தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய ஜோன் மேரி பிரிசில்லாவின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, சிறப்பினமாக, அவருடைய குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் திருமதி.ஜோன் மேரி பிரிசில்லா அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். pic.twitter.com/V0MqqD5ZU7
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 30, 2020
Comments