விழுப்புரத்தில் சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது குண்டாஸ்

0 6171
விழுப்புரத்தில் சிறுமி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரத்தில் சிறுமி தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான ஜெயஸ்ரீ கடந்த 10ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறையில் உள்ள முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments