பொது இடங்களில் எச்சில் துப்பினால், புகை பிடித்தால் 2 ஆண்டு சிறைத் தண்டனை
மகாராஷ்டிரத்தில் பொது இடங்களில் எச்சில் துப்புவோர், புகைபிடிப்போருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தங்களைச் சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கவும், மீண்டும் அதே தவறைச் செய்தால் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கவும் வகை செய்யும் திருத்தங்களைத் தொற்றுநோய்ச் சட்டத்தில் சேர்க்க உள்ளது.
இது குறித்து மாநில நலவாழ்வுத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் முதன்முறை ஆயிரம் ரூபாயும், இரண்டாம் முறை மூவாயிரம் ரூபாயும், மூன்றாம் முறை ஐயாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பொது இடங்களில் எச்சில் துப்பினால், புகை பிடித்தால் 2 ஆண்டு சிறைத் தண்டனை #Maharashtra https://t.co/8aGtlL5csF
— Polimer News (@polimernews) May 30, 2020
Comments