கருப்பின நபரை முட்டியால் அழுத்திய போலீஸ் அதிகாரி மீது 3ம் நிலை கொலைக்குற்றச்சாட்டு
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கருப்பின நபரை முட்டியால் அழுத்தி அவர் மரணத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது 3ம் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட் கிழமை மின்னியாபோலிஸ் நகரில் போலீஸ் அதிகாரி டெரெக் சவின்(Derek Chauvin)முட்டிக்கு கீழ் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிலாய்ட் சிக்கி கெஞ்சும் வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.
பல்வேறு கண்டனங்கள் எழுந்ததையடுத்து டெரேக் உள்பட 4 போலீஸ் அதிகாரிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.
இதனிடையே ஜார்ஜ் உயிரிழந்ததால் அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டமும் வன்முறையும் வெடித்தது.
இதன் விளைவாக நேற்று கைது செய்யப்பட்ட டெரேக் மீது கொலை மற்றும் படுகொலைக்கான வழக்கு பதியப்பட்டுள்ளது.
Comments