ஊரடங்கு விலக்கப்பட்ட பிறகு, மேலும் ஒரு பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அறிவிக்கிறதா மத்திய அரசு?
ஊரடங்கு முற்றாக விலக்கப்பட்ட பிறகு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், மேலும் ஒரு பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி, செலாவணி மற்றும் கொள்கைத் திட்டங்களை மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. வங்கிகள் சாதனை அளவாகக் கடன் வழங்க ஒப்புதல் அளித்தும், கடன் பெறும் விகிதம் மிகக் குறைவாகவே இருப்பதாகவும், தேவை குறைவாகவே இருப்பதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
எனவே, 21 லட்சம் கோடி ரூபாய் அறிவிப்புகளின் தாக்கத்தை மத்திய அரசு முழுமையாக ஆய்வு செய்ய உள்ளதாகவும், ஒரு மாதம் கழித்து, மேலும் ஒரு பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்திய பிறகு இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், முதல் அறிவிப்பில் உள்ள இடைவெளிகளை சரிசெய்யும் வகையில் புதிய அறிவிப்பு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
Comments