கால்களால் லிப்டை இயக்கும் முறை அறிமுகம் - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்
மின் தூக்கியை கால்களால் இயக்கும் முறையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக புதிது புதிதாக பலவித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தொடுதல் மூலம் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மின் தூக்கிகளின் பொத்தான்களை கைகளுக்கு பதிலாக கால்களால் இயக்கும் முறையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
கோயம்பேட்டிலுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் உள்ள லிப்டுகளில், சோதனை அடிப்படையில் இந்த முறை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதனை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கால்களால் லிப்டை இயக்கும் முறை அறிமுகம் - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் #CMRL https://t.co/0Lck7RIx8Q
— Polimer News (@polimernews) May 30, 2020
Comments