நாட்டில் ஏற்கெனவே பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளைத் தவிரப் புதிதாக 145 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம்
நாட்டில் ஏற்கெனவே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளைத் தவிரப் புதிதாக 145 மாவட்டங்களில் கொரோனா அதிகம் பரவும் வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.
பீகார், மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் கடந்த 3 வாரங்களாகக் கொரோனா பாதிப்பு அதிகமுள்ளதாக மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா தெரிவித்துள்ளார்.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் இருந்து ஊர் திரும்பிய தொழிலாளர்களால் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் 145 மாவட்டங்களில் கடந்த 3 வாரங்களாகக் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெரும்பாலும் ஊர்ப்புறங்களைக் கொண்ட இந்த மாவட்டங்களில் திறமையாகக் கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் கொரோனா அதிகம் பரவும் பகுதிகளாக உருவெடுக்கும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
Comments