"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ரயில்களில் பயணித்த 80 பேர் உயிரிழப்பு - ரயில்வே பாதுகாப்புப் படை தகவல்
தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ரயில்களில் பயணித்த 80 பேர் உயிரிழந்ததாக ரயில்வே பாதுகாப்புப் படையின் புள்ளி விவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
வெளிமாநிலங்களில் பணியாற்றிய புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக மே ஒன்றாம் தேதியில் இருந்து பல்வேறு நகரங்களிடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மே 27ஆம் தேதி வரை மூவாயிரத்து 840 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. மே 9ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ரயில்களில் 80 பேர் உயிரிழந்ததாக ரயில்வே பாதுகாப்புப் படை புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்பட்ட நோய்கள் காரணமாக இவர்கள் இறந்ததாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ள நிலையில், அதிக வெப்பம், சோர்வு, பட்டினி ஆகியவற்றால் உயிரிழந்ததாகச் சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Comments