ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த அதிபர் டிரம்ப்...நிராகரித்த ஜெர்மன் பிரதமர்
அமெரிக்காவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அதிபர் டிரம்ப் விடுத்த அழைப்பை ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, அமெரிக்காவில் ஜி-7 உச்சி மாநாட்டை நடத்துவதை விட சிறந்த முன்னுதாரணம் இருக்க முடியாது என டிரம்ப் கருதுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. அதன்படி, வாஷிங்டனில் ஜூன் மாத இறுதியில் ஜி-7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்குமாறு அதிபர் டிரம்ப் விடுத்த அழைப்புக்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நன்றி தெரிவித்ததாக, அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். எனினும், தற்போதைய கொரோனா பேரிடர் நிலவரத்தை கருத்தில் கொண்டு, வாஷிங்டனுக்கு பயணம் செய்து, மாநாட்டில் நேரடியாக பங்கேற்க இயலாது என மெர்க்கல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
German Chancellor Angela Merkel will not attend an in-person summit of G7 leaders that US President Donald Trump has suggested he will host despite concerns over the coronavirus pandemic, a German government spokesman said Saturdayhttps://t.co/WM0S4bMMhx pic.twitter.com/b67NeBBI1k
— AFP news agency (@AFP) May 30, 2020
Comments