சீன மாணவர்களுக்கான F-1 விசா தற்காலிக ரத்து - அமெரிக்க அதிபர்
சீனாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கான எஃப்1 விசாவை தற்காலிகமாக ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதனால் சுமார் 3,000 முதல் 5,000 சீன மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் பயிலும் மாணவர்களில் ஆயிரக்கணக்கானோர் சீன ராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என டிரம்ப் அரசு கருதுவதாக கூறப்படுகிறது. உளவு பார்த்தல், அறிவுசார் சொத்துரிமை திருட்டு போன்றவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே போன்று, சீனாவுடன் ஆராய்ச்சியாளர்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் ஜே1 விசாவையும் தற்காலிகமாக டிரம்ப் ரத்து செய்துள்ளார்.
Comments