தலைமை செயலாளருடன் ஆலோசிக்காமல் மாவட்ட ஆட்சியர்கள் தளர்வுகளை அறிவிக்கக்கூடாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாளையுடன் 4ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பேசிய அவர், நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், கொரோனாவை பற்றி மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி மாவட்ட ஆட்சியர்களுக்கு பிறப்பித்த உத்தரவில், தலைமை செயலாளருடன் கலந்தாலோசிக்காமல் மாவட்ட ஆட்சியர்கள் எவ்வித தளர்வுகளையும் அறிவிக்கக்கூடாது என அறிவுறுத்தினார்.
Comments