பெங்களூரில் இருந்து மேற்குவங்கத்திற்கு டிராக்டரில் 2,000 கிலோ மீட்டர் பயணம் செய்த தொழிலாளர்கள்
பெங்களூரில் இருந்து சுமார் 200 புலம் பெயர் தொழிலாளர்கள், சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சொந்த ஊரான மேற்குவங்க மாநிலம் மால்டாவுக்கு சரக்கு லாரியில் ஏற்றிச் செல்லப்படும் டிராக்டரில் குடிபுகுந்தபடி செல்கின்றனர்.
ஒடிசா மாநிலம் கடடாக் பகுதியில் அவர்களின் நீண்ட டிராக்டர் டிராலி வந்து சேர்ந்தது. இதில் உள்ள சிறு இடுக்குகளிலும் அமர்ந்தபடியும் படுத்தபடியும் கூட்டம் கூட்டமாக எந்த வித சமூக இடைவெளியும் இல்லாமல் அவர்கள் பயணம் மேற்கொண்டனர். ரயில்களையும் பேருந்துகளையும் இயக்காமல் அவர்களின் வேலை வாய்ப்பையும் ஊரடங்கு பறித்துக் கொண்டதால் அவர்கள் இப்படி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Comments