ஜிஎஸ்டி குழுக்கூட்டம் ஜூலை மாதம் வரை ஒத்திவைக்க வாய்ப்பு?
ஜிஎஸ்டி குழு ஜூன் மாத மத்தியில் மீண்டும் கூட உள்ள நிலையில் தற்போது ஜூலை மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதால் இப்போது கூட்டத்தை கூட்டுவது பயனளிக்காது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் முதலே ஜிஎஸ்டி வரிகள் நிலுவையில் உள்ளன. மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பால் நாடு தழுவிய ஊரடங்கு 60 நாட்களைக் கடந்து நீடித்து வருவதால் கணக்கு தாக்கல் செய்து வரி செலுத்துவதற்கான அவகாசமும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழில் வர்த்தகம் முடங்கியதால் கடந்த மார்ச் முதல் ஜிஎஸ்டி வரிகளிலும பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆயினும் அவசியம் அற்ற பொருட்களின் மீது வரியை உயர்த்த வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர்
ஜிஎஸ்டி குழுக்கூட்டம் ஜூலை மாதம் வரை ஒத்திவைக்க வாய்ப்பு? #GSTCouncil https://t.co/hxdbTDfZzn
— Polimer News (@polimernews) May 30, 2020
Comments