ஸ்பெயினில் வறுமையில் வாடும் 25 லட்சம் பேருக்கு மாதந்தோறும் ரூ.39,000 நிவாரணம்
ஸ்பெயினில், வறுமையில் வாடும் 25 லட்சம் பேருக்கு மாதந்தோறும் 462 யூரோக்கள், இந்திய மதிப்பில் சுமார் 39,000 ரூபாய் வழங்க உள்ளதாக துணை பிரதமர் Pablo Iglesias அறிவித்துள்ளார்.
கொரோனா தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயினில், பாதிக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அங்கு ஆட்சியில் உள்ள இடது சாரி அரசு, தனிநபருக்கு 462 யூரோக்கள் அல்லது குடும்பத்துக்கு 1015 யூரோக்கள் அதாவது சுமார் 85,000 ரூபாய், மாதந்தோறும் வழங்க முடிவெடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 8 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ள துணை பிரதமர் Pablo, இதற்காக ஆண்டுக்கு 25,000 கோடி ரூபாய் செலவிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Comments