மனைவியையும் கொரோனா வைரசையும் ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்

0 2869

மனைவியையும் கொரோனா வைரசையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்ததால் இந்தோனேசியா அமைச்சர் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

பல்கலைக்கழக நிகழ்ச்சியில் ஒன்றில் ஆன்லைன் மூலம் பங்கேற்று உரையாற்றிய இந்தோனேசியா பாதுகாப்புத்துறை அமைச்சர் முகமது மஹ்புத், தனி நபர் உடல் ஆரோக்கியத்தை பேணுவது மூலமே கொரோனா பாதிப்பை சரி செய்ய முடியும் என்று கூறினார்.

கொரோனா வைரஸ் மனைவியை போன்றது என்றும் முதலில் கட்டுப்படுத்த முயற்சித்தீர்கள், அது முடியாது என்பதை உணர்ந்த நிலையில் வைரசோடு வாழ பழகிக்கொள்வீர்கள் என தனக்கு வந்த மீம்ஸை மேற்கோள் காட்டி நகைச்சுவையாக கூறினார். இந்த கருத்து பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதாக கண்டனங்கள் எழுந்து உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments