தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட உத்தரவு
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் திறக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தையும் மறு உத்தரவு வரும் வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அங்குள்ள கடைகளில் அரசு அறிவுறுத்தியபடி முக கவசம், சானிடைர் பயன்படுத்தாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வியாபாரம் செய்வது ஆய்வில் தெரியவந்தது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சுமார் 150 கடைகளின் வியாபாரிகளிடம் நேரில் சென்று கடைகளை மூடுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து கடைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டன. கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசும் மாநகராட்சியும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தாங்கள் ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட உத்தரவு #TNagar | #ChennaiGreaterCorporation https://t.co/msZGfcLvxl
— Polimer News (@polimernews) May 29, 2020
Comments