தேர்வுத்துறை இயக்ககத்தில் பணியாற்றும் உதவியாளருக்கு கொரோனா...மறுப்பு தெரிவித்த அதிகாரிகள்
அரசு தேர்வுத்துறை இயக்ககத்தில் பணியாற்றும் உதவியாளருக்கு கொரோனா தொற்று உள்ளதாக வெளியான தகவலுக்கு, அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு தேர்வுத்துறை இயக்ககத்தில் பணியாற்றும் உதவியாளர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அரசு தேர்வுத்துறை இயக்ககம், தொடர்ந்து அலுவல் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளது. மேலும், அலுவலகங்களில் கிருமி நாசினி தெளித்து அடிக்கடி தூய்மை படுத்தப்படுகிறது என்றும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுத்துறை இயக்ககத்தில் பணியாற்றும் உதவியாளருக்கு கொரோனா...மறுப்பு தெரிவித்த அதிகாரிகள் #EducationalDepartment | #Covid19 https://t.co/50g2FTXPQ3
— Polimer News (@polimernews) May 29, 2020
Comments