அத்தியாவசியமில்லாத ரயில் பயணத்தை கர்ப்பிணிகள், சிறார்கள் தவிர்க்க ரயில்வே அமைச்சகம் வேண்டுகோள்
கர்ப்பிணிகள், 10 வயதுக்கும் குறைவான சிறார்கள் அத்தியாவசியமின்றி ரயில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கும்படி ரயில்வே அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா பரவலால் பொது ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப சிராமிக் சிறப்பு ரயில்களை ரயில்வே அமைச்சகம் இயக்கி வருகிறது. இந்த பயணத்தில் மருத்துவ காரணங்களினால் சில உயிரிழப்புகள் நேரிட்டதை அடுத்து, ரயில் பயணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் புதிய வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதில் உயரழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதோர் போன்றோரும், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு குறைவான சிறார்கள், 65 வயதுக்கு அதிகமான முதியோர் ஆகியோர் அத்தியாவசியமில்லாத பயணத்தை தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments