கல்வி உதவித்தொகை கோரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான IND - SAT தேர்வு ஒத்திவைப்பு - HRD
இந்தியாவில் படிக்க உதவித்தொகை கோரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான IND - SAT தேர்வு, ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகளுக்கு மட்டும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் படிக்க உதவித் தொகை கோரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான, IND - SAT தேர்வு நாளை நடைபெற இருந்தது. அந்தத் தேர்வு ஜூலை மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
Comments