அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு

0 2467
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு

சென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் நேற்று இரவு உயிரிழந்தனர்.

திருவொற்றியூரை சேர்ந்த 34 வயது நபர், கடந்த 21ஆம் தேதி முதல் வீட்டுத் தனிமையில் இருந்ததாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று பிற்பகலில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல, வியாசர்பாடியை சேர்ந்த 45 வயது நபர், கடந்த 23ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 68 வயது நபர், நேற்று மதியம் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளார். இதபோல, புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 77 வயது நபர், கடந்த 26ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments