குடும்ப அட்டைகளுக்கு ஜூன் மாதத்துக்கான பொருட்களை வாங்க டோக்கன் விநியோகம் தொடக்கம்

0 2011
குடும்ப அட்டைகளுக்கு ஜூன் மாதத்துக்கான பொருட்களை வாங்க டோக்கன் விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன்களை வீடுவீடாகச் சென்று வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஏப்ரல் மே மாதங்களில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியன இலவசமாக வழங்கப்பட்டன. ஜூன் மாதத்திலும் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க, எந்த நாளில் எத்தனை மணிக்குப் பொருட்களை வாங்க நியாயவிலைக் கடைக்கு வரவேண்டும் என்பதைக் குறிப்பிட்டு வீடுவீடாக டோக்கன் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து டோக்கன் வழங்கும் பணியில் நியாயவிலைக்கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. ஒரு நாளைக்கு நூறு பேர் கடைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்லும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments