கொரோனா தடுப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை
கொரோனா பரவலை கண்காணிக்க அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 4ஆவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு 31 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனால் அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக 26 ஆம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் ஒரே வாரத்தில் 2ஆவது முறையாக மீண்டும் நாளை முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் எந்தெந்த மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிப்பது, எந்தெந்த தளர்வுகளை அதிகரிப்பது என்பது குறித்த பரிந்துரைகளை மருத்துவ குழு வழங்கும் எனவும், அதை பொருத்து தமிழக அரசு புதிய அறிவிப்புகளை வெளியிடும் எனவும் கூறப்படுகிறது
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்தும், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்டேன். pic.twitter.com/zuWGiwJBmC
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 29, 2020
Comments