முதலமைச்சரை குறைகூறுவதையே தலையாய பணியாக கொண்டுள்ளார் மு.க. ஸ்டாலின் - அமைச்சர் காமராஜ்

0 1777
முதலமைச்சரை குறைகூறுவதையே தலையாய பணியாக கொண்டுள்ளார் மு.க. ஸ்டாலின் - அமைச்சர் காமராஜ்

முதலமைச்சரை பாராட்ட மனம் இல்லாமல், குறைகூறுவதையே தலையாய பணியாக நினைத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்டா பகுதி தூர்வாரும் பணிகள் குறித்து மு.க. ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பி, குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆர்.காமராஜ் இன்று வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாம் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் தேவைகளை உணர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், டெல்டா பகுதிகளிலுள்ள ஆறுகள், கால்வாய்கள்மற்றும் வடிகால்களை தூர்வார சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் 392
பணிகளை சுமார் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள அனுமதி வழங்கி, போர்க்கால அடிப்படையில் முடிக்க உத்தரவிட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments