வோடபோன் ஐடியாவின் 5 சதவீத பங்குகளை வாங்குவதற்கு கூகுள் பரிசீலனை
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை வாங்குவதற்கு கூகுள் பரிசீலித்து வருகிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு 54 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அந்த நிறுவனம் தொடர்ந்து இயங்கக் கூடுதல் முதலீடு தேவைப்படுகிறது.
இந்நிலையில் இணைய உலகில் மிகப்பெரும் நிறுவனமான கூகுள் வோடபோன் ஐடியாவின் 5 விழுக்காடு பங்குகளை வாங்குவது குறித்துப் பரிசீலித்து வருவதாக பைனான்சியல் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் ரிலையன்ஸ் ஜியோவின் பங்குகளை வாங்கத் திட்டமிடுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் கடும் போட்டி உருவாகும் சூழல் உள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்புச் சந்தையில் வோடபோன் ஐடியாவின் பங்கு 28 புள்ளி 4 விழுக்காடு ஆகும்.
Comments