சென்னையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்வு
திருமழிசை காய்கறி சந்தையில் காய்கறிகள் வரத்து சீராக உள்ள நிலையிலும், சென்னையில் பல்வேறு பகுதிகளில் சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கொரோனா காரணமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் மொத்த காய்கறி வியாபாரம் நடைபெற்று வருகிறது. திருமழிசைக்கு வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து காய்கறி வரத்து சீராக காணப்படுவதால், காய்கறிகள் விலையும் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும், சென்னையின் மற்ற பகுதிகளில் காய்கறிகள் விலை இரண்டில் இருந்து 3 மடங்காக அதிகரித்துள்ளது.
திருமழிசைக்கு சென்று காய்கறி கொள்முதல் செய்வது இரட்டிப்பு செலவை ஏற்படுத்துகிறது என்பதால், வேறு வழியின்றி அந்த செலவை ஈடுகட்ட விலையை உயர்த்தி விற்பனை செய்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திருமழிசை சந்தையில் விற்பனையாகும் மொத்த விலையை விட ஒவ்வொரு காய்கறியும் கிலோவுக்கு 20 ரூயாய் அளவுக்கு உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்வு #Chennai | #VegetablePrice https://t.co/FbUA7eZpF8
— Polimer News (@polimernews) May 29, 2020
Comments