முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரி திமுக சார்பில் மனு

0 1700
முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரி திமுக மனு

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரியும், பிற மாநிலங்களில் அந்தந்த மாநில இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2020 ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு முடிவுகளுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் திமுக மனு கொடுத்துள்ளது.இது குறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில், தி.மு.க. சார்பில் செய்தித் தொடர்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments