புலம் பெயர் தொழிலாளர்களிடம் போக்குவரத்து கட்டணம் வசூலிக்க கூடாது - உச்ச நீதிமன்றம்
சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்வதற்கான ரயில் அல்லது பேருந்து கட்டணத்தை புலம் பெயர் தொழிலாளர்களிடம் இருந்து வசூலிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் நடந்த விசாரணைக்குப் பிறகு பிறப்பித்த உத்தரவில், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்புவதற்கான போக்குவரத்து செலவுகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களே ஏற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசிதிகளை அளிப்பதும், அவர்கள் முறையாக பதிவு செய்து சொந்த ஊர் திரும்புவதை உறுதி செய்வதும் மாநில அரசுகளின் பொறுப்பு என்று நீதிமன்றம் கூறியுள்ளது. தொழிலாளர்கள் ரயிலில் பயணம் செய்யும் போது அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை வழங்குமாறு ரயில்வேக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments