ரன்…! கொரோனா ரன்..! ஓட்டமெடுத்தவரை அறையில் பூட்ட உத்தரவு..!

0 6587
ரன்…! கொரோனா ரன்..! ஓட்டமெடுத்தவரை அறையில் பூட்ட உத்தரவு..!

தூத்துக்குடியில் கொரோனா வார்டில் இருந்து தப்பி ஓடியவரை சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் விரட்டிச்சென்று, மீண்டும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். கொரோனாவுக்கு அஞ்சி ஓட்டமெடுத்தவரை அறையில் பூட்ட உத்தரவிட்ட சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வரும் கொரோனா நோயாளிகளால் தூத்துக்குடியில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வந்தாலும், மறுபக்கம் பலர் குணம் அடைந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்து கொரோனா பாதிப்புக்குள்ளான குடிமகன் ஒருவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நோய்த்தொற்றில் இருந்து குணமாவதற்கு முன்பாகவே யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்தார்.

கொரோனா நோயாளி ஒருவர் தப்பிச்செல்லும் தகவல் அறிந்த மருத்துவமனை ஊழியர்கள், அவரை பிடிக்க விரட்டி வந்தனர். வெளியே செல்ல முயன்ற அவரை காவலாளியும், தூய்மை பணியாளரும் தடுத்து நிறுத்தினர்.அதையும் மீறி கேட்டை தள்ளிக்கொண்டு செல்ல முயல வேறு வழியின்றி அவரிடம் "ஸ்வீட் கொடுப்பார்கள், வாங்கிச்செல்லுங்கள்" என்று ஏமாற்றி உள்ளே அனுப்பி வைத்தனர்

ஒரு கட்டத்தில் கொரோனா வார்டுக்கு வெளியே நின்று கொண்டு உள்ளே செல்ல அடம் பிடித்தவரை, போலீசாரை வரவழைத்து மிரட்டி உள்ளே செல்லும்படி அறிவுறுத்தினர்குடிமகனாக இருந்தாலும் கொரோனா நோயாளி என்பதால் அவரை தொடுவதற்கு தயங்கி, பின்னர் ஒருவழியாக வார்டுக்குள் கொண்டு சென்றனர். மீண்டும் தப்பிவிடாமல் இருக்க அந்த நபரை தனி அறையில் போட்டு அடைத்து வைக்குமாறு மருத்துவமனை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது

சென்னையில் இரு கொரோனா நோயாளிகள் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதே நேரத்தில் சென்னையில் இருந்து தென்திருப்பேரை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட சடலம் ஒன்றின் அடக்கத்திற்கு சென்ற கோவங்காடு பகுதியை சேர்ந்த ஆடிட்டர் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியானது. கோவங்காட்டில் 20 க்கும் மேற்பட்டோருடன் அவர் வாலிபால் விளையாடியது தெரியவந்துள்ளதால், அவருடன் விளையாடியவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா சமூகத்தில் வேகமாக பரவும் நிலையில் குழுவாக விளையாடுவதையும், கும்பலாக சுற்றுவதையும் தவிர்க்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசின் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து தங்களை குணப்படுத்திக் கொள்வதே சாலச்சிறந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments