ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.50,000 கோடி நிதியுதவி வழங்க பிரதமருக்குக் கோரிக்கை
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்குமாறு பிரதமர் மோடிக்குத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஏர் இந்தியா பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், சிக்கலான நேரங்களில் நாட்டுக்குத் தேவைப்படும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 50 ஆயிரம் கோடி நிதியுதவியை அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த உதவி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மட்டுமல்லாமல், விமானப் போக்குவரத்துத் துறைக்கும், பொருளாதாரத்துக்கும் உதவியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்கும் பணியில் ஏர் இந்தியா விமானங்களே ஈடுபடுத்தப்பட்டன.
ஏர் இந்தியா நிறுவனம் 58 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் உள்ளதால் அதை விற்க அரசு முடிவு செய்ததும், வாங்குவதற்கு எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
Comments