பொறுப்பற்ற செயலால் தனக்குக் கொரோனா தொற்றியதாக தெரிவித்த மகாராஷ்டிர அமைச்சர்

0 2876
பொறுப்பற்ற செயலால் தனக்குக் கொரோனா தொற்றியதாக மகாராஷ்டிர வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவ்காத் தெரிவித்துள்ளார்.

பொறுப்பற்ற செயலால் தனக்குக் கொரோனா தொற்றியதாக மகாராஷ்டிர வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவ்காத் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்கக் களமிறங்கிப் பணியாற்றிய ஜிதேந்திர அவ்காத்துக்குத் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் வென்டிலேட்டரின் உதவியுடன் சிகிச்சை பெற்ற அவர் இப்போது முழுமையாகக் குணமடைந்துள்ளார்.

காணொலியில் பேசிய அவர், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைத் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாததால் கொரோனா பொறியில் சிக்கிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். 

ரத்தச் சிவப்பணு எண்ணிக்கை மிகவும் குறைந்துபோனதாகவும், சரியான நேரத்தில் உணவு உட்கொண்டு வருவதால் மீண்டும் எண்ணிக்கை உயர்ந்ததாகவும், மற்றவர்களை ஒப்பிடும்போது தான் விரைவில் குணமடைந்ததாகவும் ஜிதேந்திர அவ்காத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments