அண்ணாமலை பல்கலை.யில் உபரியாக இருந்த 2,635 பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளுக்கு மாற்றம்

0 2617

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக இருந்த 2 ஆயிரத்து 635 பணியாளர்கள் பல்வேறு அரசுத் துறைகளுக்கு மாற்றி, உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓட்டுநர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், எழுத்தர் என 2 ஆயிரத்து 635 பணியாளர்கள் தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நிதிச்சுமை காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக இருந்த பணியாளர்களை இடமாற்றம் செய்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா ஆணை பிறப்பித்துள்ளார். தற்போது மாற்றப்பட்டுள்ள துறையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணிபுரியவும், 59 வயது வரை பணி நீட்டிப்பும் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments