கொரோனாவால் 2 ஆலைகளை மூடுவதாக பிரபல கார் நிறுவனமான நிசான் அறிவிப்பு
ஏற்கனவே வர்த்தக இழப்பை சந்தித்து வந்த பிரபல கார் நிறுவனமான நிசான், கொரோனாவால் இழப்பு மேலும் அதிகரித்ததை தொடர்ந்து, ஸ்பெயின் மற்றும் இந்தோனேசியாவில் உள்ள தனது ஆலைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.
ஸ்பெயின் ஆலை மூடப்பட்டாலும் ஐரோப்பாவுக்கான கார் உற்பத்தி பிரிட்டனில் உள்ள சுந்தர்லேண்டிலும், (Sunderland) இந்தோனேஷிய உற்பத்தி தாய்லாய்ந்திலும் தொடரும் என அதன் தலைமை அதிகாரி மகாடோ உசிதா அறிவித்துள்ளார்.
வர்த்தக இழப்பை தொடர்ந்து நிசான் நிறுவனம் தனது பன்னாட்டு உற்பத்தியில் 20 சதவிகிதத்தை குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments