திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வந்த சொத்துக்களின் முழுவிவரங்களை இணையதளத்தில் வெளியிட சேகர் ரெட்டி கோரிக்கை

0 1344

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வந்த சொத்துக்கள் பற்றிய முழு விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான, தமிழகத்தில் உள்ள 23 நன்கொடை சொத்துக்கள், ஏலத்தில் விடப்படப் போவதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில்,சேகர் ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நன்கொடை தருபவர்களின் பெயர், நிலத்தின் சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என ஆலோசனை கூறியுள்ளார்.

இதன் மூலம் நன்கொடை அளித்தவர்களுக்கு பெருமிதத்தையும், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உருவாக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments