சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்த பிறகு சலூன் கடைகளை திறக்க நடவடிக்கை-உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

0 2060

சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகளை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து  தமிழ்நாடு முடித்திருத்துவோர் நலச்சங்க தலைவர் முனுசாமி தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், மே 23ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவை அடுத்து சென்னையை தவிர மற்ற இடங்களில் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாக  கூறினார்.

மனுதாரர் தரப்பில், சென்னையில் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டி, சலூன் கடைகளையும் திறக்க அனுமதிக்க கோரிக்கை விடப்பட்டது.  இதற்கு தமிழக அரசு தரப்பில், சென்னையில் கள நிலவரத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து  விசாரணையை அடுத்த மாதம் 8 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments