எவரெஸ்ட் சிகரத்தை அளக்கும் பணியில் மீண்டும் ஈடுபட்டுள்ள சீனா
உலகின் மிகப்பெரிய மலைச்சிகரமான எவரெஸ்டின் சரியான உயரத்தை மீண்டும் அளந்து உறுதி செய்வற்காக, சீனாவின் சர்வே குழு ஒன்று நேற்று அதன் உச்சியை சென்றடைந்தது.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8844.43 மீட்டர் என சீனா அளந்துள்ளது. இது நேபாளம் அறிவித்த உயரத்தை விடவும் 4 மீட்டர்கள் குறைவாகும். இதை அடுத்த கடந்த 1 ஆம் தேதி திபெத் வழியாக சீன சர்வே குழுவினர் எவரெஸ்ட் சிகரம் நோக்கி பயணத்தை துவக்கினர்.
இதற்கு முன்னர் சீன சர்வே குழுக்கள் 1975 மற்றும் 2005 ல் எவெரெஸ்டின் உயரத்தை அளந்தனர். அப்போது முறையே 8848.13 மீட்டர், 8844.43 மீட்டர் என இரண்டு விதமான அளவுகள் வெளியாகின. இதனிடையே எவரெஸ்டின் உச்சியிலும் சேவையை அளிக்கும் விதத்தில் 5ஜி செல்போன் வசதியை ஏற்படுத்த சீன நிறுவனமான ஹுவேய் (Huawei)முனைந்துள்ளது.
Comments