கொரோனாவால் ஏப்ரல் மாதம் 12.2 கோடி பேருக்கு வேலையிழப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கடந்த மாதம் மட்டும் சுமார் 12.2 கோடி பேர் வேலையிழந்ததாக பொருளாதாரத்தை கண்காணிக்கும் தனியார் ஆய்வு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலோர் தினக்கூலிகள் என்றும் மற்றவர்கள் சிறு தொழில், நடைபாதை வியாபாரம், கட்டுமானம், கைவண்டி மற்றும் ரிக்ஷா தொழிலில் ஈடுபடுபவர்கள் என்றும் அது கூறியுள்ளது.
இவர்களில் சுமார் 1.2 கோடி பேர் இந்த ஆண்டு கொடிய வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் உலக அளவில், கொரோனாவால் தீவிர வறுமைக்கு தள்ளப்படும் மக்களின் எண்ணிக்கை 4.9 கோடியாக இருக்கும் என்றும் இந்த அமைப்பு கணித்துள்ளது.
இந்தியர்களில் சுமார் 10.5 கோடி பேர் உலக வங்கி நிர்ணயித்துள்ள வறுமைக்கோட்டுக்கான தினசரி வருமானமான 243ரூபாயை விடவும் குறைவாக சம்பாதிக்கும் நிலைக்கு சென்று விடுவார்கள் என்று ஐ.நா. பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஏப்ரல் மாதம் 12.2 கோடி பேருக்கு வேலையிழப்பு #Coronavirus | #Covid19 https://t.co/1hsZaRB2gW
— Polimer News (@polimernews) May 28, 2020
Comments