சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனையை இருமடங்காக அதிகரிக்க வேண்டும் - ராமதாஸ்
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிசோதனையை உடனடியாக இருமடங்காக அதிகரிக்கவேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 27-ம் தேதி நிலவரப்படி, சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 77 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 92 சதவீத பாதிப்புகள் மே மாதத்தில் தான் உருவாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது. சென்னையில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு புதுபுது யுக்திகளை மேற்கொள்ளுகிற போதிலும், அந்த முயற்சிகள் பலனளிக்காதது வருத்தத்தை ஏற்படுத்துவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
கொரோனா பரிசோதனையை அதிகரிக்காவிட்டால், ஜூன் மாதத்திற்குள் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டிவிடும் என வல்லுநர்கள் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ராமதாஸ், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே நோய் பரவலை தடுக்க முடியும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments