கோயம்பேடு சந்தை பகுதியில் 2ம் முறையாக கிருமி நாசினி தெளிப்பு
சென்னை கோயம்பேடு சந்தை பகுதியில் 2ஆவது முறையாக இன்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று அதிகரிக்க காரணமாக இருந்ததால் கடந்த 5ஆம் தேதி தற்காலிகமாக சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் திறக்கப்பட்டது. இருப்பினும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பதற்கான பணிகளை சிஎம்டிஏ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அந்த சந்தையை மீண்டும் திறக்கும்போது தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினி தெளிக்கும் பணி கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 2ஆவது முறையாக இன்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஒரு வார காலத்திற்கு பிறகு மீண்டும் கிருமிநாசினி தெளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பிறகு ஆய்வு நடத்தி சந்தை திறப்பு குறித்து அதிகாரிகள் முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
கோயம்பேடு சந்தை பகுதியில் 2ம் முறையாக கிருமி நாசினி தெளிப்பு #Chennai | #KoyambeduMarket https://t.co/J22W7DzPbi
— Polimer News (@polimernews) May 28, 2020
Comments