ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகளை விரட்ட பயன்படுத்தப்படும் டிரோன்கள்
ராஜஸ்தானில் விவசாய நிலங்களில் அழிவை ஏற்படுத்தும் வெட்டுக் கிளிகளை விரட்ட ஆளில்லா டிரோன் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய வெட்டுக்கிளிகள், ராஜஸ்தானில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதை விரட்ட மத்திய வேளாண் அமைச்சகத்தால் ராஜஸ்தான் அரசிடம் ஆளில்லா டிரோன் விமானங்கள் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டன.
அதில் சில டிரோன்கள், ஜெய்ப்பூரின் சோமு தாலுகாவில் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளை விரட்ட புதன்கிழமை முதல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வெட்டுக்கிளிகளை விட அதிக உயரம் பறக்கும் திறன் கொண்ட டிரோன்களில் 10 லிட்டர் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வெட்டுக்கிளிகளை விரட்ட ஒருவகையான சத்தத்தை எழுப்பவும் டிரோனில் வசதி செய்யப்பட்டுள்ளது.
Comments